திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை.
திருச்சி, அக்.30: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், முத்துராமலிங்க தேவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி மா.ராசு, முன்னாள் எம்.எல்.ஏக்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி முருகன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன். செல்வராஜ், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், அம்மா பேரவை செயலாளர் ரமேஷ். மீனவரணி கண்ணதாசன் கூட்டுறவு சங்க தலைவர் ராமு,ஜெயம் ஸ்ரீதர் கடிகை கோபால், கோப்பு நடராஜ்.ஆமூர் ஜெயராமன்
ஸ்ரீரங்கம் நடேசன். சுந்தரமூர்த்தி. போர்வெல் ரங்கராஜ். முசிறி மைக்கேல் ராஜ் .ஆமூர் சுரேஷ் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்