தையல் கலைஞர்கள் முன்னேற்ற கழக கொடி அறிமுக விழா

 திருச்சி, அக்.21:                                      திருச்சி மாவட்டம் இலால்குடி சட்ட மன்ற தொகுதியில் இன்று மணக்கால் தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தையல் கலைஞர்கள் முன்னேற்ற கழக கொடி அறிமுக விழா  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது. 


விழாவிற்கு கழக நிறுவனத்தலைவர் பொழில்.துரைராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் மாநில துணை செயலாளர் பார்த்திபன் திருச்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து மாவட்ட தலைவர் ராஜீகுமார் முன்னிலை வகித்தனர். 

மாநில பொதுச்செயலாளர் முத்துராஜ் திலக் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தஞ்சை ஹரி பிரசாத் உள்பட பல மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சி முடிவில் இலால்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கூகூர் மைக்கேல் நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form