மடிக்கணினி கோளாறு

 


பழைய மடிக்கணினியை பயன்படுத்துவதால் கோளாறு ஏற்பட்டுள்ளது, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்சி, செப்,25:                                      திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது,இந்த முகாமில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் குறைகளை புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து கணினி மூலம் பதிவு செய்து புகார் அளிக்கப்படும், இந்நிலையில் திங்கட்கிழமை ஆன இன்று பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் பகுதி குடும்ப பிரச்சனை சம்பந்தமான புகார்களுக்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர் ஆனால் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பொதுமக்களின் புகார் பதிவு செய்ய தாமதமானதால் பொதுமக்கள் மன சங்கடம் ஏற்பட்டு சிலர் சென்று விட்டனர்.                 


இந்நிலையில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழு சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 70.க்கும் மேற்பட்ட பெண்கள், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நீண்ட நேரம் வரிசையில் மனு கொடுக்க காத்திருந்தனர் கணினி சேவை மையம் கோளாறு ஏற்பட்டு நீண்ட நேரம் ஆகியும் மனு ரசீது வழங்கப்படவில்லை எனவும் பழைய மடிக்கணினியை பயன்படுத்துவதால் தொடர்ந்து இது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது, ஆகவே பழுதடைந்த மடிக்கணினி உடனடியாக மாற்றி பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்குமாறு .கேட்டு.  திருச்சி மாவட்ட ஆட்சியர்   அலுவலகத்தின் முன்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,


இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு பகுதி செயலாளர் எம் ஐ ரபிக் அகமத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்,  வெற்றிச்செல்வன்,கார்த்திகேயன் ,பகுதி குழு உறுப்பினர்கள் ,எம் வள்ளி, அப்துல் .கையும்கிளைச்  செயலாளர் ,எஸ் முருகன், மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form