மகளிர் அணியை வலுப்படுத்த திருச்சி மாவட்ட பாஜக கட்சி மகளிரணி செயற்குழு கூட்டத்தில் முடிவு
திருச்சி, செப்,24: திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் திருச்சி மாவட்ட பாஜக மகளிரணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட மகளிரணி தலைவி ரேகா கார்திகேயன், தலைமையில் நடைபெற்றது,
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார்.
மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், கூட்டத்தை துவக்கி வைத்தார், இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்துவதற்கு பல்வேறு திட்ட பணிகளை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மகளிரணியின் எண்ணிக்கையை அதிகரிக்க அனைவரும் ஒன்று இணைந்து மக்களை நேரில் சந்தித்து பாஜக செய்து வரும் நல்ல திட்டங்களில் எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் கட்சியை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில மகளிரணி துணை தலைவி புவனேஸ்வரி,திருச்சி மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மலர்கொடி,குங்குமசுந்தரி,துர்கா,. கவிதா மோகன், வினோதா ஆகியோர் கலந்து கொண்டனர்,