மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான சிறப்பு முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆக.20) நிறைவடைகிறது.
திருச்சி, ஆகஸ்ட், 20: மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வந்தது இதில் ஏராளமான மகளிர்கள் உரிமைத் தொகைக்காண விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர், இந்த விண்ணப்ப முகாம் இன்றுடன் நிறைவுற்றது
இதன் விண்ணப்ப விவரங்கள் மீதான பரிசீலனை நடைபெற்று, விண்ணப்பதாரா்களுக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல்கள் அனுப்பப்படவுள்ளன.
மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, விண்ணப்பதாரா்களின் விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
இதற்காக, இரண்டு கட்டங்களாக முகாம்கள் நடந்து முடிவடைந்த நிலையில், விடுபட்டோருக்காக சிறப்பு முகாம் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது.
இந்த முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆக.20) நிறைவடைகிறது.
இது சம்மந்தமான குறுஞ்செய்தி வரும்: உரிமைத் தொகை திட்டத்துக்காக இதுவரை 1.54 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் திங்கள்கிழமை (ஆக.21) முதல் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன.
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரம், உங்கள் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரா்களுக்கு அனுப்பப்படும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால், அவா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்பிறகு, பயனாளிகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டு மாவட்ட வாரியாக வெளியிடப்படவுள்ளன. மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தை செப்.15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளாா்.

