இயற்கையை நேசிப்போம்

 திருச்சி, ஆகஸ்ட், 19:                             திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணித்துறை மாணவி மற்றும் உதயம் பல்நோக்கு சமூக சேவை மையம் இணைந்து கரூர் மாவட்டம், ஆர்ச்சம்ப்பட்டி ஊராட்சியில் "இயற்கையை நேசிப்போம்! தூய்மையை காப்போம்! சுகமான வாழ்வுக்காக" என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


இந்நிகழ்ச்சியில் ஊர் தலைவர். கோவிந்தராஜ் தலைமையில். உதயம்- பல்நோக்கு சமூக சேவை மையத்தின் இயக்குனர் டாக்டர் பவுல்ராஜ்  வாழ்த்துரை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக லியோனியா பங்கேற்றார் மேலும் மற்றொரு சிறப்பு விருந்தினராக. ஜெயராணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். அடுத்ததாக ஜேக்கப். உதயம்- பல்நோக்கு சமூக சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர்  இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளில் பங்கேற்றார். 


இந்நிகழ்ச்சியில் 90க்கும் மேற்பட்ட ஆர்ச்சம்பட்டி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, சமூகப் பணித்துறை சார்பாக செல்வி உலகேஸ்வரி ஒருங்கிணைத்திருந்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form