கருவுற்றிருக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு

 கருவுற்றிருக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி:


திருச்சி.ஆகஸ்ட்.19:                                திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் ஜேனட் நர்சிங் ஹோம் புதூர் சேர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு, ஆரோக்கியமான கர்ப்ப வாழ்க்கை முறைகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


நிகழ்சசியில் சிறப்பு விருந்தினராக ஜேனட் நர்சிங் ஹோம் டாக்டர். விகோட்ரியா ஜோஹன்ஸ்டன்  கலந்துகொண்டு கருவுற்றிருக்கும் பெண்களுக்கு விளக்கக்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இந்நிகழ்ச்சிக்கு ஜேனட் நர்சிங் ஹோம் நிறுவனர் ஜே. சுசீலா தேவி எம்.டி. தலைமை தாங்கினார். இந்நிகழ்சசியில் கர்ப்பம்தரித்திருந்த பெண்களுக்கு எப்படி கர்ப்ப காலத்தில் தங்களை பராமரித்துக்கொள்ள வேண்டும் என்பதை குறித்தும் மற்றும் எப்படி தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கக் காட்சிகள்மூலம் விவரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறையின் உதவிப் பேராசிரியர் ஜே. புளோரன்ஸ் ஷாலினி,  தலைமையில் சமூகப் பணி முதுகலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி ஜா.மாரிலின் டாலி ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் நாற்பதுக்கும் மேலான கருவுற்ற இருந்து பெண்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form