திருச்சியில் 3 மணி நேரம் விடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை.
திருச்சி, ஆகஸ்ட் 16: திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சிலம்பம் யூத் பெடரேஷன் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காப்போம் என்கிற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் தலைவர் மோகன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழியை எடுத்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இரு கைகளிலும், சிலம்ப குச்சியை கொண்டு தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாமல் சுற்றி உலக சாதனை படைத்தனர். இந்த சாதனையானது துபாய் ஜென்ட்ஸின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..