மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டி

 மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் வட்டத்தினை பெற்ற திருச்சி வீரர்களுக்கு  சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.


திருச்சி, ஜூலை,28.:                                  உலக பாரம்பரிய சிலம்பம் போட்டி மற்றும் கலை சங்கம் சார்பாக மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா இந்தியா ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். இந்தபோட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கி 24 -ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது இதில் நான்கு வயது முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்க திருச்சியில் இருந்து மாவட்டம் மாநில அளவில் ஏற்கனவே நடந்த பல்வேறு சிலம்ப போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற  13 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இவர்கள் முதல்முறையாக வெளிநாடுகளில் நடக்கும் சிலம்ப போட்டியில் பங்கேற்று ஒட்டுமொத்த போட்டிகளிலும் தமிழக மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர் இவர்கள் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது சிலம்பக் கலை பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணா, விஜயன் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் உற்சாகமாக வரவேற்று மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் திருச்சி இ.பி.சாலையில் உள்ள வைகவுண்டஸ் கோஷன் அரசு முஸ்லீம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் அஷீல் என்ற மாணவி ஒரு தங்கப்பதக்கமும் இரண்டு வெங்கலப் பதக்கங்களும் வென்று உள்ளார்,அவருக்கு

குடும்பத்தார்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form