திருச்சி, ஜூலை, 31: திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பள்ளிக்குழந்தைகளுக்கான போக்குவரத்து விதிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பயிற்றுநர்களுக்கான 20-வது மாவட்ட அளவிலான பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்,கலந்து கொண்டு உரையாற்றினார்.....
அருகில் மாநகர காவல் துணை ஆணையர் செல்வக்குமார், முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.