பள்ளியில் முதல் மாணவியாக தேர்வு

 திருச்சி. பள்ளியில் முதல் மாணவியாக தேர்வு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு.


திருச்சி,மே, 20:                                        திருச்சி மாவட்டம் பீமநகர் பகுதியில் உள்ள செவன்த் டே பள்ளியில் பயின்று வரும்  மாணவி ரிஃபானா, இவர் இப்பள்ளியில்.6ம் வகுப்பு முதல் பயின்று வந்தார் இவரின் தந்தை ஆசிக் ஜான், மீன் வியபாரம் செய்து தனது மகளை படிக்க வைத்துள்ளர்.


தொடர்ந்து பத்தாம் வகுப்பு வரை படித்து வந்த மாணவிதற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது முடிவுகளை எதிர்பார்த்து இருந்த பெற்றோர்.

ரிஃபானா, மெட்ரிகுலேஷன் மற்றும் சமச்சீர் கல்வி பாடத்தில் 500/ 482 மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதை கண்டு மிகுந்த சந்தோஷத்துடன் தனது மகளை பாராட்டினார், 


பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஆசிரியைகளும் சக மாணவிகளும்  பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவியை பாராட்டினர். மாணவியின் பெற்றோர் தங்களுடைய மகள் இவ்வளவு மதிப்பெண் பெற்றது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றனர். 

மேலும் பிசினஸ் மேக்ஸ் படித்து அதிக  மதிப்பெண் பெற்று அரசு துறையில் பணிபுரிய வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளதாக தெரிவித்தனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form