புளியால் வந்த பிரச்சனை எஸ் டி.பிஐ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
திருச்சி, மே, 16: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்உள்ள கடை ஒன்றில் 10 நாட்களுக்கு முன்பு சமையலுக்கு புளி வாங்கிச் சென்றதாகவும் அந்த புளி சரியில்லை என்று கள்பாளையத்தைச் சேர்ந்த அரசுத் துறையில் பணிபுரிந்து வரும் வி.எ. ஒ கலைவாணி என்பவர் நேற்று இரவு கடைக்குச் சென்று புளியை திருப்பி கொடுத்த போது கடைகாரர் இது இங்கே வாங்கவில்லை என்று கடையில் உள்ளவர்கள் கூறியதாகவும் இதனால் இரு தரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு சம்பந்தப்பட்ட வி.எ.ஓ ஆட்களை கூட்டி வந்துகடையில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இது சம்பந்தமாக திருச்சி எஸ் டி பி கட்சியினர் வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா தலைமையில் சம்பந்தப்பட்ட வி.எ.ஓ.மீதும் அடியாட்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துவியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்
இதில் எஸ் டி பி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.