பாஜகவை தோற்கடிப்பது

 இந்திய ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது,இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பது, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


திருச்சி, மே, 15:                                       இந்திய ஒற்றுமை இயக்கத்தின் சார்பில்  கிறிஸ்டினா சாமி தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,

இந்த ஆலோசனை கூட்டத்தில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள் இராசன்,உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

இந்த கூட்டத்தில் சிறுசிறு சமூக அமைப்புகள் இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து அந்தந்த மாநிலத்தில் இந்திய ஒற்றுமை இயக்கத்தை துவக்கும் வண்ணம் ஜூன் 10ஆம் தேதி இந்திய ஒற்றுமை மாநாடு நடத்தப்பட உள்ளது.அதற்கான திட்டமிடுதல் கூட்டமாக நடைபெற்றது,

இந்த கூட்டத்தில்  மாநாட்டின் தலைப்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது,அமைப்பின் நோக்கமாக வருகின்ற 2024ல் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விரோத இந்திய விரோத அரசியலில் நடத்திக் கொண்டிருக்கும் பிஜேபியை தோற்கடிக்க வேண்டும்,அதேபோல் அடுத்த நோக்கமாக எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் நமது ஜனநாயகம் காக்கப்படுகிறதா? சுதந்திரமாக நடத்தப்படுகிறதா? என்பதை நாங்கள் கண்காணித்து 2030 வரைஎங்கள் பணிகள் தொடர முடிவு எடுத்துள்ளோம்,

இதை நோக்கி ஆரம்ப கட்டமாக இந்த மாநாடு தொடங்க உள்ளது இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் குறிப்பாக யோகேந்திர யாதவ், மற்றும் அகில இந்திய தலைவர்கள் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளன என தெரிவித்தன

Post a Comment

Previous Post Next Post

Contact Form