திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தில் தண்ணீரில் மூழ்கி சிறுமி பலி
திருச்சி, ஏப் 24: திருச்சி அரியமங்கலம் அரியமங்கலம் தெற்கு பகுதி பூங்களாயி அம்மன் கோயில் பகுதியில் வசிக்கும் சதாம் உசேன், (மனைவி) மதினா பேகம் இவர்களுக்கு ரியாஸ் முகமது, என்ற ஒரு ஆண் குழந்தையும் ரிஹானா நஸ்ரின் என்ற 6. வயது பெண் குழந்தையும் உள்ளது,
ரமலான் பெருநாள் முடிந்து நேற்று உறவினர்களுடன் திருச்சி முக்கொம்பு சுற்றுலாத் தளத்திற்கு சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.
அப்போது ரிஹானா நஸ்ரின் என்ற 6. வயது பெண் குழந்தையை திடீரென காணோம் என்று தேட ஆரம்பித்துள்ளனர் யாராவது குழந்தையை கடத்தி இருப்பார்களா?அல்லது தண்ணீரில் விழுந்து விட்டதா என்ற சந்தேகத்தில் காவல்துறைக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்,
அப்போது அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் தண்ணீரில் மூழ்கிய குழந்தை பார்த்ததும் உடனடியா மீனவர் மீட்டு கொடுத்ததா கூறுகின்றனர்,
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர்,
இச்சம்பம் குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பாவத்தால் அப்பகுதியிலும் குடும்பத்தாரும் உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.