கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

 திருச்சி அரியமங்கலத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட இரு வேறு வழக்குகளில் ரவுடி உட்பட  2 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, மார்ச், 21:                                   திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கதிராழம் இவரது மகன் சேட்டு (28)இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நேற்று காலை திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு அரியமங்கலம் எஸ்.ஐ.டி பகுதியில் இறங்கி சென்று கொண்டிருந்த பொழுது கீழ அம்பிகாபுரம் எம் ஜி ஆர் நகரை சேர்ந்த ராஜாங்கம் மகன் கீர்த்திமணி (30)என்பவர் சேட்டுவிடம் கத்தியை காட்டி மிரட்டி தனக்கு மது அருந்துவதற்கு  500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம்  குறித்து சேட்டு அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் அரியமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து கீர்த்தி மணியை கைது செய்தார்.


இதேபோல் அரியமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்பாஸ் இவரது மகன் இஸ்மத் (30)இவர் உக்கடை பாலம் பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அரியமங்கலம் மலை மேல் வீடு, உக்கடை, காயிதே மில்லத் நகரை சேர்ந்த நாகராஜ் மகன் பேச்சுமுத்து (28) என்பவர் இஸ்மத் கடைக்கு சென்று மது அருந்த பணம் வேண்டும் என கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் கேட்டுள்ளார்.

சம்பவம் குறித்து இஸ்மத் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அரியமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து பேச்சமுத்துவை கைது செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேச்சு முத்து மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Previous Post Next Post

Contact Form