தூய அந்திரேயா பள்ளியில் கல்வி விழிப்பணர்வு நிகழ்ச்சி:
மணப்பாறை, பிப்ரவரி 02- திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் மணப்பாறை, தூய அந்திரேயா மேல்நிலைப் பள்ளியில் "கல்வியின் முக்கியத்துவம்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிக்ச்சிக்கு தூய அந்திரேயா மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் குணசேகரன் தலைமயுரை ஆற்றினார்.
மேலும், இந்நிக்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரிர் இரா. பிரசாத்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூகப் பணித்துறை முதலாமாண்டு மாணவி பெ. உலகேஸ்வரி இந்நிக்ச்சியை தொகுத்து வழங்கினார்.