கூட்ட நெரிசலை தவிர்க்க எர்ணாகுளம்—வேளாங்கண்ணி—எர்ணாகுளம், சிறப்பு ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு:
திருச்சி, ஜன, 19: ரயில் எண். 06035 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமைகளில் மதியம் 01.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 05.40 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும் இந்த ரயில் சேவை கூடுதலாக பிப்ரவரி 04, 11, 18 மற்றும் 25 2023 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ( 4 சேவைகள்)
அதேபோல், ரயில் எண். 06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும் இந்த ரயில் சேவை கூடுதலாக பிப்ரவரி 05, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். (4 சேவைகள்)