மாநில அளவில் கபடி போட்டி

 மாநில அளவிலான கபடி போட்டி -  600க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு


திருச்சி டிச 25: திருச்சி ஏர்போர்ட் பகுதியில் பி.டி.எஸ் ஸ்போர்ட் கிளப் மற்றும் தீம் பாய்ஸ் நண்பர்கள் நடத்தும் 28 ஆம் ஆண்டு மாநில அளவிலான இரண்டு நாள் கபடி போட்டிகள் இரவு போட்டியாக நடைபெற்றது. இப் போட்டியை ஏர்போர்ட் ஊர் பஞ்சாயத்தார்கள் முக்கியஸ்தர்கள் வாலிப பாதுகாப்பு கமிட்டினர் தலைமையில் போட்டிகள் நடைபெற்றது.


போட்டிகளில் திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், காரைக்குடி, பெரம்பலூர், சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 க்கு மேற்பட்ட அணிகளை உள்ளடக்கிய 600 க்கு  மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.



போட்டியில் நடுவர்களாக மாநில நடுவர்கள் சேதுராஜ், சதீஷ், கிறிஸ்டி ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.

சிறந்த வீரர்களுக்கான பதக்கங்களும் மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற அணிக்கு  சிறப்பு பரிசாக ரூபாய் 25000 மற்றும் கோப்பயும்,  


மேலும் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 20,000, இரண்டாம் பரிசாக 15,000, மூன்றாம் பரிசாக 12,000, நான்காம் பரிசாக 8000 மற்றும் சிறப்பு பரிசாக ரூபாய் 5000 வழங்கப்பட உள்ளது.


இப் போட்டியில் சிறப்பு விருந்தினராக விடுதலை கட்சியின் சார்பில் ஏர்போர்ட் பகுதி நிர்வாகி பெரியசாமி,  தில்லைஅரசு, ஞானம், சால்வின் ஏர்போர்ட்மதன் மற்றும் திருச்சி விமான நிலைய காவல் நிலைய ஆய்வாளர் மலைச்சாமி, கே.கே.குரூப்ஸ் தலைவர் கார்த்திக் ராஜா, திமுக செயலாளர் பன்னீர்செல்வம், செப்கோ ப்ராப்பர்ட்டி உரிமையாளர் பாலமுரளி, பாட்டாளி மக்கள் கட்சியின் ஏர்போர்ட் பகுதி செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Post a Comment

Previous Post Next Post

Contact Form