தமிழக சட்டமன்ற தீர்மானங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டிருக்கும் கவர்னர் தமிழ்நாட்டுக்கு தேவையா? என பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்தும் .த.ம.ஜ.க. தலைவர் கே எம் சரீப் அறிவிப்பு.
சென்னை, டிச, 14: தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இருபதிற்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு கொண்டு போய் சேர்க்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் ஆளுநர் அவர்கள் தமிழக அரசை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களுக்கு தேவையான, அவசியமான பல தீர்மானங்கள் இந்த மசோதாக்களின் இருக்கிறது. சனாதனத்தை பற்றி, சாதிய தர்மங்கள் பற்றி தமிழக மக்களுக்கு பாடம் நடத்துகிற ஆளுநர், இந்த மக்களுக்கான எந்த பிரச்சனைகளை பற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை. கவர்னருக்கு உள்ள பணிகளைத் தவிர அனைத்து வேலைகளையும் தற்போதைய ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார். ஆளுநரின் அலட்சியப் போக்கு பற்றி நீதிமன்றமே சென்றாலும் அதற்குள் இந்த ஆட்சியின் காலமே முடிந்து விடும் என்பது ஆளுநருக்கு நன்றாக தெரியும். மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் உறவு பாலமாக செயல்பட வேண்டிய ஆளுநர் மத்திய அரசின் குறிப்பாக பாஜகவின் ஏஜெண்டாக மட்டும் செயல்படுவது தமிழக மக்களின் நலன்களை கேள்விக்குறியாக்குகிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளம் மேற்கு வங்காளம் தெலுங்கானா என எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இது போன்ற ஒரு சூழ்நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இது மிக அதிகபட்சமாக ஆளுநரால் நடத்தப்படுகிறது. தமிழக மக்களின் தேவைகளுக்கான சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசியல் சட்ட மீறலில் ஈடுபடும் இந்த கவர்னர் தமிழ்நாட்டுக்கு தேவையா? என்பது பற்றி ஒரு பொது விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது .எனவே இந்த ஆளுநர் தேவையா? வேண்டுமா ?என ஒரு மக்கள் கருத்து கணிப்பை பொதுமக்கள் முன்னிலையில் எதிர்வரும் டிசம்பர் 28ம் தேதி தமிழகத்தின் 25 இடங்களில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்துகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக அக்கரையாளர்கள் இந்த கருத்து கணிப்பிலே, மக்கள் வாக்கெடுப்பிலே கலந்து கொள்கிறார்கள்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை, வேலூர் ,கிருஷ்ணகிரி ,திருச்சி, கும்பகோணம் ,கரூர், பண்ருட்டி ,மதுரை, தேனி ,திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை ,மேலூர், புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், நெல்லை ,தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய இடங்களில் இந்த கருத்துக் கணிப்பை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்துகிறது,