மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள்சபை கூட்டம்
திருச்சி, டிச,4: சத்தியமூர்த்தி நகர்கட்சி கிளை சார்பாக மக்கள்சபை கூட்டம் .சமர்சிங் தலைமையில் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது,
இந்த கூட்டத்தில் ரேனுகா மாவட்டசெயற்குழு, ஜிகே..ராமர் பகுதிக்குழு செயலாளர், மம்மி (எ) விஜயலெட்சுமி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சத்தியமூர்த்திநகரில் குடியிருக்கும் மக்களுக்கு குடி மணை பட்டா வழங்க வேண்டும்,சமுதாயக்கூடம் அமைத்து கொடுத்தது போல் படிப்பகம் ஒன்று கட்டி தர வேண்டும்,
ஈபி சாலை வழியாக பேருந்து வழித்தடத்தை ஏற்படுத்தி அப்பகுதி மக்கள் சிரமம்யின்றி சென்று வரவழிவகை செய்ய வேண்டும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த தூய்மை பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
1997 ல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள பொதுமக்களுக்கு 101 நபர்களுக்கு துவாக்குடியில் வீடு கட்டுவதற்கு வீட்டு மணை பட்டா வழங்கப்பட்டது, ஆனால் அங்கு வீடு கட்டுவதற்கு முறைப்படி ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை, எனவே அங்கு வீடு கட்டுவதற்கும் முறைப்படி ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பகுதி செயலாளர் ஜிகே ராமர் பேசினார்,
இந்த கூட்டத்தில் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்