திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை:-
புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதல்வர், மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுடைய ஆணைக்கிணங்க...
திருச்சி, டிச,8: திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும்,
மாண்புமிகு அம்மா அரசின் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தியதைக் கண்டித்தும்,
கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தும் அவற்றை நிறைவேற்றாத செயலைக் கண்டித்தும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்* நடைப்பெற உள்ளது.
அதன் விவரம்
நகராட்சி/பகுதிகளில் 13.12.2022, செவ்வாய்க்கிழமை - காலை 10.00 மணி அளவில்
1)துறையூர் நகர கழகம் சார்பாக துறையூர் பேருந்து நிலையம் அருகில்
2)முசிறி நகர கழகம் சார்பாக முசிறி கைகாட்டி
3)ஸ்ரீரங்கம் பகுதி கழகம் சார்பாக ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் எதிரில்
4) திருவானைக்காவல் பகுதி கழகம் சார்பாக திருவானைக்காவல் நாலு கால் மண்டபம்
ஒன்றியங்களில் 14.12.2022, புதன்கிழமை - காலை 10.00 மணி அளவில்
1)அந்தநல்லூர் வடக்கு & தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக ஜீயபுரம் பேருந்து நிலையம் எதிரில்
2)மணிகண்டம் வடக்கு & தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக அல்லித்துறை திடல்
3)மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகம் சார்பாக கொட்டப்பட்டு
4)மண்ணச்சநல்லூர் கிழக்கு & மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்
5)முசிறி கிழக்கு & மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக அய்யம்பாளையம் கடைவீதி
6)தொட்டியம் கிழக்கு & மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக பாலசமுத்திரம்
7) தா.பேட்டை கிழக்கு & மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக தும்பலம்
8)துறையூர் வடக்கு & தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக முசிறி பிரிவு ரோடு துறையூர்
9)உப்பிலியபுரம் வடக்கு & தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக எரக்குடி.
பேரூராட்சிகளில் 16.12.2022 வெள்ளிக்கிழமை -காலை 10.00 மணி அளவில்
1)சிறுகமணி பேரூராட்சி கழகம் சார்பாக பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் எதிரில்
2)தொட்டியம் பேரூராட்சி கழகம் சார்பாக தொட்டியம் வானப்பட்டறை கார்னர்
3)காட்டுப்புத்தூர் பேரூராட்சி கழகம் சார்பாக காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம்
3)மேட்டுப்பாளையம் பேரூராட்சி கழகம் சார்பாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்
4)தாத்தையங்கார் பேட்டை பேரூராட்சி கழகம் சார்பில் தா.பேட்டை கடை வீதி
5)மண்ணச்சநல்லூர் பேரூராட்சி கழகம் சார்பாக மனச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில்
6)ச.கண்ணனூர் பேரூராட்சி கழகம் சார்பாக சமயபுரம் சந்தை கேட்டு அருகில்
7)உப்பிலியபுரம் பேரூராட்சி கழகம் சார்பாக உப்பிலியபுரம் அண்ணா சிலை அருகில்
8)பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கழகம் சார்பில் கணபதி பாளையம், B.மேட்டூர் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்மு.பரஞ்ஜோதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.