55 வது தேசிய நூலக வார பரிசளிப்பு விழா அமைச்சர் பங்கேற்றார்
திருச்சி, டிச,23. திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் 55 வது தேசிய நூலக வார பரிசளிப்பு விழாபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை ஏற்று தலைமை உரையாற்றி நூலக வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் நூலகத்தில் சேவையாற்றியவர்களுக்கு நூலக சேவை செம்மல் விருது வழங்கியும் சிறப்பித்தார்,
விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு முன்னுரையாற்றினார் துணை மேயர் திவ்யா தனக்கோடி,மண்டலத் தலைவர்கள் மதிவாணன்,ஜெய நிர்மலா,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி.வாசகர் வட்டத் தலைவர் கோவிந்தசாமி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார்,உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட மையம் உலகத்தின் முதல் நிலை நூலகர் தனலட்சுமி நன்றி கூறினார்.