திமுக சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருச்சி, அக், 15: ஒன்றிய அரசை கண்டித்து இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வையும் கண்டித்து எதிர்ப்பு போராட்டம்திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமார் மாணவரணி அமைப்பாளர் டாக்டர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது முன்னிலை கிழக்கு மாநகரச் செயலாளர் மு மதிவாணன்கழகத் தலைவர் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞரணி செயலாளர்ரும்மான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் திருச்சி தெற்கு மாவட்ட கழக திமுக சார்பாக ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் இந்தி எதிர்ப்பு, ஒரே நுழைவுத் தேர்வு ஆகியவைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன்,
சபியுல்லா,வண்ணஅரங்கநாதன் குணசேகரன் செந்தில், லீலாவேலு, செங்குட்டுவன் மூக்கன், மலைக்கோட்டை பகுதிகழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்





