கே.எம். சரீப்,கண்டன அறிக்கை

 பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் சோதனை. மோடி அரசின் திட்டமிட்ட தாக்குதல். த.ம.ஜ.க.தலைவர் கே.எம். சரீப் கடும் கண்டனம். 



திருச்சி, செப்,27: இந்தியா முழுவதும் இஸ்லாமிய சமுக மக்களின் மீது தொடர்ந்து கடும் போக்கை ஆளும் மோடி அரசு கடைபிடித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய மக்களின் சமுக,சமய உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும்,போராடிவரும் பாப்புலர் பிரண்ட் போன்ற அமைப்புகளை ஒழித்துக்கட்டும் வேலைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. 

என்.ஐ.ஏ.அமலாக்கதுறை,சி.பி.ஐ,என அரசின் அனைத்து துறைகளையும் அது தன் ஏவல் ஆட்களாக பயன் படுத்துகிறது. இந்தியாவை ஆண்ட எந்த மத்திய அரசும் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியதில்லை.

எவ்விதமான ஆதரமும் இல்லாமல் பாபுலர் பிரண்ட் அலுவலகங்கள் அவற்றின் நிர்வாகிகள் வீடுகள்,தொடர் சோதனை என்கிற பெயரில் நாசம் செய்யப்படுகிறது. நிர்வாகிகள் மிரட்டப்படுகின்றனர். அவர்கள் மிரட்டலுக்கு பயந்தவர்கள் இல்லை என்றாலும்,ஜனநாயக சக்திகள் இந்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். 

மக்களாட்சியின் மாண்பை குழைத்திடும் இது போன்ற முறையற்ற செயல்களை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கடுமையாக கண்டிக்கிறது. 

மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் 

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.தலைவர் கே.எம். சரீப்,அறிக்கை வெளியீட்டுள்ளார்



Post a Comment

Previous Post Next Post

Contact Form