உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாராட்டு

 திருச்சி, செப்,21:                                    கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற உணவு திரு விழாவில் குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்றது,


சென்னையில் நடைபெற்ற உணவு திருவிழாவிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நிர்வாகத்திடம் பாராட்டு சான்று பெற்ற என் கடமை உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் இயக்குனர் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள்  ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் படதொகுப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது 


என் கடமை படகுழவினருக்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.   ஆர்.ரமேஷ்பாபு,பாராட்டு சான்றிதழை  வழங்கி படகுழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்,

 


அதனை தொடர்ந்து என் கடமை படகுழுவினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமாரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர், 


இந்நிகழ்வில் என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல் ஒளிப்பதிவாளர் யாசின் படத்தொகுப்பாளர் வின்சன்ட் புரொடக்ஷன் மேனேஜர் செந்தில் குமார் அசோசியேட் மேனேஜர் யோக ராஜ் இசையமைப்பாளர் மைக்கேல் இணை இயக்குனர் முருகேஷ்  நடிகைகள் மாரியம்மாள் வென்மதி மீனா நடிகர்கள் ஆரோக்கியசாமி பழனிசாமி ஜெகன் முத்து ஏ. டி. ஆர் முருகன் கந்தசாமி சி. எஸ் சந்திரன் முத்துபாண்டி கோகுல் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form