திருச்சி, செப், 18: பகலவன் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரின் திரு உருவச்சிலையை சுற்றிலும் எப்போதும் இல்லாத அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்,
மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் மனுதர்ம சாஸ்திரம் எரிப்பு போராட்டம் என அறிவித்திருந்த நிலையில் பெரியார் சிலையை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன இதனால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்து, வருட வருடம் பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் வியாபாரத்தை நம்பி கடை திறந்தவர்கள் இந்த வருடம் திறக்க முடியவில்லை என மன வருத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்,வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம்
பெரியாரின் சிலையை சுற்றிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் அங்கு பதற்றம் நிலவியது



