சிறைவாசிகள் விடுதலைக்கு மூன்று நாள் பொதுமக்களிடத்தில் கையெழுத்து

 வெல்ஃபேர் கட்சி சார்பில் மூன்று நாள் கையெழுத்து இயக்கம் ஜாதி மதம் பாராமல் கையெழுத்திட்ட பொதுமக்கள்,


கடந்த  பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டும், அநீதி இழைக்கப்பட்டும் வருகிறது. இதுபோன்ற அநீதிக்கு எதிராக வெல்பர் கட்சி சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்,இதன் தொடர்ச்சியாக,        அரசியல் கைதிக விடுதலைக்காகவும், யுஎபிஎ, என்எஸ்எ. போன்ற கறுப்புச் சட்டங்களை நீக்கவும் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு இக்கொடுமைகளை கொண்டு செல்ல வேண்டும், என்ற நோக்கத்தில் ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களும் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


அதன் ஒரு நிகழ்வாக       இக்கையெழுத்து இயக்கம் திருச்சியில் மாவட்டத் தலைவர்  சிராஜ்தீன் தலைமையில் மாவட்ட செயலாளர் காஜாமைதீன், வழிகாட்டுதழில் மாவட்ட பொருளாளர் முஹம்மத் யாஸீன்  முன்னிலையில் திருச்சி மாவட்ட வெல்ஃபேர் கட்சி செயல் வீரர்கள், தொண்டர்களுடன் அனைத்து வழி பாட்டுத்தலங்கள், மற்றும் இல்லங்களிலும் வியாபார தளங்கள் என அனைத்து ஜாதி மதம் கடந்து மனித நேயத்துடன் மக்களைச் சந்தித்து இக்கையெழுத்து இயக்கத்தின் சாரம்சத்தை எடுத்துக்கூறி கையெழுத்துப் பெற்றனர்.


இதில்                                                  வெல்ஃபேர் கட்சியின் திருச்சி மாவட்டஊடக பிரிவு செயலாளர்             ஐ. நவாஸ்கான், உட்பட பலர் கலந்து கொண்டனர்,

Post a Comment

Previous Post Next Post

Contact Form