இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட 17வது மாநாடு நடைபெற்றது,
மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,திருச்சி மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்
குண்டும் குழியுமாக உள்ள தெரு சாலையை உடனடியாக புதிய சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுப்படுத்திட வேண்டும்.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தினம் தினம் உயிர் பலியாவதை தடுத்திட பால் பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சர்வீஸ் சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெரு நாய்கள், பன்றிகள், மாடுகள், சாலைகளில் சுற்றி வருவதால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது,இவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரத் தொழில் நிறுவனம். துப்பாக்கி தொழில்ச்சாலை, ரயில்வே உள்ளிட்ட தொழிற்சாலைகளை தனியார் மயப்படுத்தாமல் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்த வேண்டும்.
அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்,
சாலை அமைக்க மாநகரின் சாலைகள் அனைத்தும் ஓரே நேரத்தில் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், எனவே சாலைகள் அமைக்கும் பணியை துரிதப்படுத்திட வேண்டும்.
திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையாவதை தடுத்து, போதை பழக்கத்திற்கு ஆளான இளைஞர்களையும் மாணவர்களையும் மீட்டிட விழிப்புணர்வு பிரச்சாரமும் மற்றும் மறுவாழ்வு மையமும், மருத்துவ உதவியும் செய்திட தன்னார்வலர்கள், இளைஞர் அமைப்புகளை இணைத்து அரசு சார்பில் குழுக்களை அமைத்திட வேண்டும்.
இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்திட வார்டுகள் தோறும் விளையாட்டு மைதானம் மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியாளர்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் உடற்பயிற்சி கூடம், சதுரங்கம், கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி மையம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் கபடி போட்டி நடத்திட தடை விதிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும்,
திருச்சி மாநகர் பகுதிகளிலும் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலும் நடைபெறும் தொடர் திருட்டை தடுத்திடு.
அரியமங்கலம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்க சுரங்கப்பாதை அமைத்து கொடுத்து, அரியமங்கலம் இரயில் நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட 17 வது மாநாடு அரியமங்கலம் பகுதியில் 7. ம் தேதி நடை பெற்ற கூட்டத்தில் சுரேஷ்,மாநகர் மாவட்ட தலைவர் திருச்சி மாநகர் 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கனல் கண்ணன்,முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயசீலன்,முன்னாள் மாநில துணை செயலாளர்கள் செல்வராஜ், லெனின். மாநகர் மாவட்ட செயலாளர் மாவட்ட பொருளாளர்ஜெய் குமார், மற்றும் மாவட்டத்தினுடைய துணைத் தலைவர் பாரதி சீனிவாசன், நவநீதகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுபதி, ஜான்சி ரானி, மற்றும் 8.தேதி மாநகர் மாவட்ட வாலிபர் சங்க பிரதிநிதிகள் மாநாடு ஆயில் மில் பஸ்டாப் ஜூப்ளி மஹாலில் நடைபெற்றமாநாட்டில் -ரெஜிஸ் குமார், தமிழ் மாநிலத் தலைவர், வெற்றிச்செல்வன், முன்னாள் வாலிபர் சங்க மாநகர செயலாளர ரேணுகா, மாதர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் மோகன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பாலசந்திரபோஸ், தமிழ் மாநில இணை செயலாளர் தலைவராக பா.லெனின் மாவட்ட செயலாளராக சேதுபதி, மாவட்ட பொருளாளராக நவநீதகிருஷ்ணன், துணைதலைவர்களாக ஷாஜகான், சந்துரு, துணைச் செயலாளர்களாக நிவேதா, யுவராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஏழுமலை, அஜித் குமார் உள்ளிட்ட 25 புதிய மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாட்டில் மேற்கண்ட தீர்மானங்கள் பிரதிநிதிகளால் முன்மொழியபட்டு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு
திருச்சி மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்திடு குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக புதிய சாலையாக அமைத்துக் கொடு
தெரு நாய்கள், பன்றிகள், மாடுகள், சாலைகளில் சுற்றி வருவதால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது இவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்து என
திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு வரும் 22.8.2022 திங்கள் அன்று நூதனப் போராட்டம் நடத்துவது என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது,