மாவட்ட தொடக்கநிலை இடையிட்டு சேவை மையம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்து
உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொருளாதார, கலாச்சார, அரசியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பு அவர்களின் சாதனைகள் உள்ளிட்டவற்றை போற்றும் வகையில் இந்த மகளிர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை வலியுறுத்தும் விதமாக திருச்சி அரசு மருத்துவமனையில் மகளிர் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஆரோகியத்தை பற்றியும் ஆரோக்கியமான உணவுகள் உண்பதை பற்றியும் வழியிருத்தி கூறப்பட்டு நோய் தொற்று பரவாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் எனவும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது,
இந்த விழாவில் மருத்துவமனை முதல்வர் வனிதா, கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார், அதை தொடர்ந்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அருண்ராஜ், குழந்தைகள் நலப்பிரிவின் துறை தலைவர் சிராஜூதீன் நஜீர் மற்றும் மைதிலி டிஇஐசி பல் மருத்துவர் காயத்ரி உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. மேலும் விழாவில் பங்குபெற்ற குழந்தைகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது