பக்தர்களுக்கு மூலிகை நீர்

கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசாமி திருக்கோயிலில் மூலிகை நீர்மோர் வழங்கப்பட்டது:


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசாமி திருக்கோயில் : கோடை வெப்பம் அதிகரித்துவருவதை யொட்டி கோயில் வளாகம் முழுவதும்  பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது, மேலும் கோடை வெப்பத்தின்  தாக்கத்தில்லிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு இன்று 04.03.2022  முதல் தங்கக் கொடிமரம் அருகிலும் , துறை பிரகாரம் கட்டணம் யில்லா வரிசையிலும்  சுமார் ஐந்தாயிரம்  பக்தர்களுக்கு மருத்துவ  குணம் நிறைந்த மூலிகை நீர்மோர்  கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு  செய்துள்ளது 


அதை இன்று 04.03.2022  கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார் அருகில் உதவி ஆணையர் கு. கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் மா. வேல்முருகன் ,உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.கிருஷ்ணா மற்றும் அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form