திருச்சி மாவட்ட மேயராக மு.அன்பழகன் பதவியேற்றுக்கொண்டார்

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்அதைத்தொடர்ந்து இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மேயர் பதவிக்கான போட்டியில் திருச்சி மேயராக .மு.அன்பழகன்  பதவியேற்றுக் கொண்டார்.


 இந்நிகழ்வில் கழக முதன்மைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


 உடன் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் .இனிகோ இருதயராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் ஆகியோரும் மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form