பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உள்ள மொழிச் சோதனை ஆய்வுகூடத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி பட்டறை தொடங்கப்பட்டது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உள்ள மொழிச் சோதனை ஆய்வுகூடத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி பட்டறை பிப்ரவரி 09.ம் தேதி துவங்கப்பட்டது பிப்ரவரி 10.ம் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும்
முன்னதாக ஆங்கில துறையின் பேராசிரியர் தெபோரா,இறைவசனத்தை வாசித்தார் அதனை தொடர்ந்து ஆங்கிலத்துறை பேராசிரியரும், மொழிசோதனை ஆய்வுகூடத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சாந்திகிளமெண்ட் அம்மையார் மாணவ மாணவிகளை எவ்வாறு அணுகவேண்டும் என்றும் மொழிச் சோதனை ஆய்வுக்கூடத்தின் சாராம்சங்கள் நடைமுறைகள் மேலும் அதனுடைய பயன்பாடுகள் பற்றியும் மென் பொருள் மூலமாக எவ்வாறு ஆங்கில மொழியினை சிறப்புற எளிமையாக இனிமையாக கற்றுக்கொள்ளலாம், என்றுரைத்தார்.
ஆங்கில துறையின் தலைவரும் கலைப்புல தலைவருமான முனைவர். ஷோபனாஅம்மையார், சுய ஒழுக்கம் மற்றும் அலுவலகத்தில் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் பற்றியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலாண்மை துறையின் பேராசிரியரும், இணை அயல்நாட்டு தொடர்பு புலதலைவருமான முனைவர் மைக்கேல் டேவிட் பிரேம்குமார்,பணியாளர்களின் நேர மேலாண்மை, அலுவலக மேலாண்மை, திட்டமிடுதல் மற்றும் திறம்பட செயல்படுத்துதல் பற்றியும் எவ்வாறு அர்ப்பணிப்போடு பணிபுரிய வேண்டும் என்றும் பல்வேறு விதமான மேற்கோள்களோடு அழகாக தனக்கே உரியபாணியில் எடுத்துரைத்தார்.
பேராசிரியர் இரா. பிரசாத் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.முனைவர். ஜெபா ஐசக் சாமுவேல், முனைவர். சுசிகரன், அ. யாக்கோபு,சே. ஜெனிட்டா கிரிஸ்டி,பி. ஆனந்த் ஸ்டான்லி ஜோன்ஸ், செல்வி. ம.டெபோரா,பாரதிதாசன்,பி.வினோதினி ஆகியோர் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ழ்