விவசாய சங்க தலைவர் திரும்பிச் செல்ல வாகன வசதியை ஏற்படுத்தித் தராததால் அய்யாக்கண்ணு ஏற்படுத்திய பரபரப்பு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் போராடு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து 27ம் தேதி மறியல் போராட்டம் நடத்தினர்
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்துவாகனத்தில் ஏற்றி உறையூர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்த அனைவரையும் மாலையில் விடுதலை செய்யும் பொழுது வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்காததால் உறையூர் சாலை வழியாக இருந்து அண்ணமலை நகர் சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்க்கு விவசாயிகள் கூட்டமாக சாலையில் நடந்து சென்றனர்
அப்போது அண்ணமலை நகர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதை அறிந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லும் படி கூறினர் அப்போது வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என விவசாயிகள் சார்பாக குற்றம்சாட்டி சாலையில் அமர்ந்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது
உடனே காவல்துறையினர் காவல்துறையின் வாகனத்தை ஏற்பாடு செய்து அவர்களை சத்திரம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறினர் இதையடுத்து அனைவரும் வாகனத்தில் ஏற்றி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது