ரூ.30 லட்சத்து 50 ஆயிரம்மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை
திருச்சி, செப்.28:
திருச்சியில் 30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது
இந்நிலையில் இன்று 28,ம் தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சீவிநகர் சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை
ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை மற்றும் கோட்டை காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி இடத்தில் வாகன சோதனைசெய்தனர்.
அப்பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக வந்த வாகன எண் KA-09-C-7543 என்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், மேற்படி வாகனத்தில் 64 மூட்டைகள் ஹான்ஸ், 30 மூட்டைகள் கூல் லிப்ஸ், 24 மூட்டைகள் விமல் மற்றும் சைடு 5 மூட்டைகள் தடைசெய்யப்பட்ட குட்கா வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மதிபுள்ள தடைசெய்யப்பட்ட மேற்படி குட்கா பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்தும், மேற்படி வாகனத்தை ஓட்டி வந்த சோமுசேகர், மனோஜ்குமார், ஆகிய இருவரை கைது செய்து
வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது
திருச்சி மாநகரில் இதுபோன்று தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயலுக்கு பயன்படுத்தி வந்த நான்குசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய பாஸ்கர், என்பவரையும், அவரது அண்ணன் முத்து, என்பவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து முப்பது லட்சத்து ஐம்பதாயிரம் சந்தை மதிப்புள்ள மொத்தம் சுமார் 1000 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும், விற்பனை செய்து வைத்திருந்த மூன்றுலட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தும் நான்கு நபர்களையும் கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.