சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்து
காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு முஸ்லிம்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி, யூடியூப்பில் வீடியோக்கள் வெளியிட்ட, மாதவரத்தை சேர்ந்த சிவயோகி (எ) சிவக்குமார் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் காவல்நிலையத்தில் புகார்அளித்து வந்தனர் அதன் தொடர்ச்சியாக திருச்சியில் திருச்சி ஷாஹின்பாக்குழு சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தனர்
இந்நிலையில்பல்வேறு இஸ்லாமிய அமைப்பின்புகாரின் அடிப்படையில் சிவயோகி என்கிற சிவகுமார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருச்சியில் ஷாஹின்பாக் குழுவினர் சார்பில் சாலை மறியலில் ஈடுபடுவதாக ஆலோசனையில் இருந்தோம் ஆனால் தற்பொழுது 21/9/2021 அன்று
மணலி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிவக்குமார், தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் யோகக்குடில் சிவயோகி சிவகுமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க வலியுறுத்துகின்றோம்
இது போன்ற சமூக விரோதிகளை கடுமையான சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் அமைதிப் பூங்காவான தமிழகத்தை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை காவல் துறையினர் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறோம்
மேலும் சமூக வலைதளங்களில் இதுபோன்ற வீடியோ பதிவிடுபவர்களை கண்காணித்து தவறான பதிவுகள்போடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த வீடியோ பதிவுகளை இணையதளத்திலிருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்
காவல்துறையின் துரித நடவடிக்கையால் 21/9/2021 அன்று நடைபெற இருந்த சாலை மறியல் கை விடப்பட்டு உள்ளது என திருச்சி ஷாஹின்பாக் குழுவினர் தெரிவித்தனர்