திருச்சி அரியமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி பழைய பால்பண்ணை பஸ்டாப் அருகே நேற்று 17/9/2021 இரவு டூவிலரில் சாலையைக் கடக்க முயன்ற போது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே மாலிக், மற்றும் ஷாஜகான் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
இறந்தவர்களின் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இளைஞர்கள் திடீரென இன்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும் போது விபத்து நடந்த பகுதியில் தடுப்புகள் அமைக்க சொல்லியும் மாற்று வழியில் சர்வீஸ் சாலையில் வாகனத்தை இயக்க சொல்லியும் கூறினர்
மேலும் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது அரியமங்கலம் பால்பண்ணையில் பேருந்துகள் நிறுத்தாமல் அதற்கு முன்பாகவே நிறுத்துவதும் போட்டிபோட்டு செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே இதை அரசு அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என கூறினர்
இந்த சாலை மறியலில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பேச்சுவார்த்தையில் தடுப்புகள் அமைக்கப்படும் என கூறிய பிறகு சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்