தேசிய மருதம் மக்கள் முன்னேற்றகழகம் சார்பில் தமிழகமுதல்வருக்கு நன்றி
தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, நன்றி தெரிவித்தும்
சாதிப் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்று போராடிய தலைவர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய இருவர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்ச்சியில் தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் எம்.பி.செல்வம், மாநிலஅமைப்புசெயலாளர். ஈரா மணிசங்கர், திருச்சி மாவட்டச் செயலாளர் மாங்குடிபழனிச்சாமி, கொண்டையன் பேட்டை கார்த்திக், ஒன்றிய நகர கிளை கழக கோபி,மற்றும் இருபதுக்கு மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக. தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்டச்செயலாளர் கமலக்கண்ணன்,வழக்கறிஞர் முத்துகுமார், ஆகியோர், கலந்து கொண்டனர்