ஜூலை 31.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர்: அய்யாக்கண்ணு, தலைமையில் இன்று 31/7/2021மாலை
சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணி, அவர்களை நேரில் சந்தித்து வெளிநாட்டில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் ஹவுஸ் சர்ஜன் ஆக பயிற்சி கொடுத்து அவர்களையும் மருத்துவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். ஏற்கனவே இவ்வாறு 50 வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி மருத்துவராக ஆணையிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே மீதமுள்ள வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்களையும் ஹவுஸ் சர்ஜனாக பயிற்சி அளித்து மருத்துவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்தார். இந்த
சந்திப்பின் போது சென்னை மாவட்ட தலைவர் பா.ஜோதி முருகன்,திருச்சி மாவட்ட தலைவர். மேகராஜன், வீரப்பூர் காடையாம்பட்டி ராமலிங்கம், ஈச்சம்பட்டி. குணசேகரன். மதிமன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்
