நடைபெற உள்ளஉள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாகபணியாற்றிட அதிமுக திருச்சி வடக்குமாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைகூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தில்லைநகர் கட்சிஅலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,அதிமுகவடக்கு மாவட்டச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி, தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னிலை வகித்தார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில்நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில்திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில்தேர்தல் பணி குழுவை அமைத்துதேர்தல் பணியை சிறப்பாக பணியாற்றிடவேண்டும்.
அதிமுகவின்50வதுஆண்டு பொன்விழாவை தலைமை அறிவிக்கும்அனைத்து நிகழ்ச்சிகளையும் திருச்சிபுறநகர் வடக்கு மாவட்டம் சார்பில்சிறப்பாக நடத்திட வேண்டும்
மேலும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது அதற்க்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தினர்,
உட்படபல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்தக் கூட்டத்தில் அமைப்புச்செயலாளரும், முன்னாள்அமைச்சருமான வளர்மதி, முன்னாள்அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள்எம்எல்ஏ.க்கள் இந்திரா காந்தி,பரமேஸ்வரி, முன்னாள் மாவட்டசெயலாளர் சுப்பு, சிறுபான்மை பிரிவுமாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,மீனவர் அணி செயலாளர் பேரூர்கண்ணதாசன், பாசறை செயலாளர்சோனா விவேக், ஒன்றிய செயலாளர்கள் கோப்பு நடராஜன், ஜெயகுமார், முத்து கருப்பன், அழகேசன், செல்வராஜ்.உட்பட பலர் கலந்துகொண்டனர்

