தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டம் சார்பாக மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்க வந்தனர்
அப்போது பத்திரிகையாளர்களிம் கூறுகையில் சகோதர இணக்கத்தை சீரழிக்கும் வகையில் தொடர்ந்து நாங்கள் தான் தமுமுக என்று போலியாக சொல்லிஅரசியல் நோக்கத்திற்காக பதற்றத்தை ஏற்படுத்தி கலங்கத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கும். தமுமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஹைதர் அலி, மற்றும் அவரை சார்ந்த நபர்களும் எங்கள் கழகத்தின் கொடியை இவர்கள் பயன்படுத்த கூடாதுஎன்று உயர்நீதிமன்றம் அறிவித்த உத்தரவை மீறி தொடர்ந்து நேர்மையற்ற முறையில் தமுமுகவின் கொடியை பயன்படுத்தியும் சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்தும் அமைப்பின் பெயரில் போலியாக வசூல் செய்தும் பொதுமக்களிடம் ஆள்மாறாட்டம் செய்து தமுமுக வின் பெயரை களங்கப்படுத்தும் விதமாகசெயல்படும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி
திருச்சி மாநகர காவல் ஆணையர் யிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர். அதன்பின் தமுமுக.மமக மாவட்ட தலைவர் முகமது ராஜா, தலைமையில்.தமுமுக மாவட்ட செயலாளர் இப்ரஹிம், மனிதநேய மக்கள் கட்சியின். செயலாளர் பைஸ் அகமது,பொருளாளர் அசரப் அலி, ஆகியோர் முன்னிலையிலும் திருச்சி மாவட்ட காவல் துணை ஆணையர் சத்திவேல்யிடம் மனு அளித்தனர்
இதில் மாவட்ட துணை அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்