பாதாள சாக்கடை திட்டம் விரைவில் முடிக்கப்படும்

 பாதாள சாக்கடை திட்டத்தில் பழுதடைந்த குழாய்களை சீரமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி திருச்சி உழவர் சந்தை அண்ணா நகரில் நடைபெற்றது இதில் மாவட்டஆட்சி தலைவர் சு.சிவராசு, தலைமை வகித்தார்



நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் ( Smart city) அபிவிருத்தி சார்ந்த பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் பழுதடைந்த குழாய்களை மறு சீரமைக்கும் பணிகளை  தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு : பழுதடைந்த பாதளச்சாக்கடை பணிகளை சரி செய்யும் பணிகள் துவங்கி உள்ளது -

11 இடங்களில் இதனை சரி செய்தால் மொத்தம் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட  65 வார்டுகளிலும் உள்ள பகுதியில் இடங்களில் உள்ள பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவுபெறும், வகையில் ரூ.201 கோடி செலவில் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது


இதில் எந்த தாமதமும் இல்லமால் விரைவாக இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.மேலும் உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீர் குழாய் அமைத்து அதன் மூலம் கழிவுநீர் நேரடியாக சுத்திகரிப்பு மையத்துக்கு செல்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது 


தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இப்பணியை தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் கே.என். நேரு, தெரிவித்தார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form