தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான மு.பரஞ்ஜோதி, தலைமையில் தில்லைநகரில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கையில் பதகை ஏந்தி தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்த திமுக அரசு
நீட் தேர்வை ரத்து செய்யாததை கண்டித்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாததை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும்.
நடுவர் மன்ற உத்தரவை நிறைவேற்றாததை கண்டித்தும் போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதை கூறி கையில் பதாகை ஏந்தி கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.ப.திருஷ்ணன், சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், எஸ்.வி ஆர். ரவிசங்கர், திருநாவுக்கரசு, மற்றும் பலர்கலந்து கொண்டனர்