இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

 திருச்சியில் கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு முழுதும் கொரானா தொற்று கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் அனைத்து திருக்கோயில்களும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு தளர்வு அறிவிக்கப்பட்டபோது திருக்கோவில்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. அதுபோல் அனைத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் 


உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்க வேண்டுமென இந்து முன்னணியினர் நாடுமுழுவதும் கோவில்களின் முன்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தி சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். திருச்சியில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி இ பி ரோடு பூலோகநாதர் சுவாமி கோவில் முன்பாக மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோஜ்குமார் தலைமையில் சூடம் ஏற்றி கோவிலை உடனடியாக திறக்க வேண்டும் என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். 


இதேபோல் உறையூர் வெக்காளியம்மன் கோவில் முன்பாக மாநகர் மாவட்ட பேச்சாளர் மணிகண்டன் தலைமையிலும், உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் முன்பாக உறையூர் மண்டல் தலைவர் கணேஷ்குமார் தலைமையிலும் சூடம் ஏற்றி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form