திருச்சியில் நாம்தமிழர்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி ஒத்தக்கடை அகில இந்திய வானொலி நிலையம் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
நாம் தமிழர் கட்சியின்மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். இரா.பிரபு, தலைமை தாங்கினார்: மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது தொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் கடந்த 2014சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை பேரல் 110 ரூபாய்விற்றபோது பெட்ரோலின் விலை 72 ரூபாய் 34 பைசாவும் டீசல் 54 ரூபாய் 44 பைசா விற்பனை செய்யப்பட்டது ஆனால் 2021ல் கச்சா எண்ணெயின் விலை பேரல் 71 ரூபாய் விற்கப்படுகிறது ஆனால் பெட்ரோலின் விலை 99 ரூபாயும் டீசல் விலை 91 ரூபாயும் விற்கப்படுகிறது
இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் மாநில அரசு விதிக்ககூடிய வரி 22 ரூபாய் 44 பைசா மத்திய அரசு விதிக்ககூடிய வரி34 ரூபாய் 26 பைசா அதுமட்டுமல்லாமல் கமிஷனாக 4.34. பேசவும் வழங்கப்படுகிறது கிட்டதட்ட வரி மட்டும் 60. ருபாய் போடப்படுகிறது இதனால் விலை உயருகிறது
மேலும் 425 ரூபாய்க்கு கிடைத்த எரிவாயு சிலிண்டர் இன்று 900 ரூபாய் நெருங்கிவிட்டது இந்த விலை ஏற்றத்தின் வரி விதிப்பை கண்டித்தும் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றதாக தெரிவித்தார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்குத் தொகுதி செயலாளர் விஜய், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர்.சோழ சூரன், மணப்பாறை சட்டமன்ற தொகுதி. அழகுசுந்தரம்,மாவட்ட மகளிர் பாசறை லட்சுமி, நூர்ஜஹான், மாநில வீரத்தமிழர் முன்னணி பிரபு, தனபால், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி பாபு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கோபி, லால்குடி. மனோகரன், கிழக்கு தொகுதி தலைவர், நாகேந்திரன்,செயலாளர் விஜயகுமார், பொருலாளர் இணைச்செயலாளர் பாரிமன்னன், தெற்க்கு மாவட்ட தலைவர் கண்ணன், பொருலாளர் முருகேஷன்,உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டனர்



