மாண்புமிகு உயர்நீதிமன்ற சுற்றறிக்கையின்படி
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நேற்று
(1,000 )ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட வன அலுவலர் கிருத்திகா,
தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் சார்பு நீதிபதி சிவக்குமார், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கங்காதாரணி, ஆகியோர் சிறப்புரையாற்றி பிறகு மரக்கன்றுகள் நட்டனர்
விழாவில் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள்,
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் கணேசன்,
செயலாளர் முத்துமாரி, மாவட்ட சட்டப்பணி
ஆனைக்குழு வழக்கறிஞர்.சரபோஜி நீதிமன்ற ஊழியர்கள்,
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V.வெங்கட்
ஆகியோர் கலந்து கொண்டனர் விழா நிறைவில் ஸ்ரீரங்கம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜய் ராஜேஷ் நன்றி கூறினார்.



