வெங்கட் அளித்துள்ள அறிக்கையில்

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் அளித்துள்ள அறிக்கையில்

 குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  வெங்கட்  அளித்துள்ள அறிக்கையில்


திருச்சி, பிப் 25:                                            நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 17 /2/ 2025 திங்கள் கிழமை  நமது சங்க வளாகத்தில் மதியம் 12 மணி  அளவில்  பொதுக்குழு கூட்டம் தலைவர் த சுரேஷ் தலைமையிலும் செயலாளர்P. V. வெங்கட், துணைத் தலைவர்கள்  சசிகுமார் மற்றும் பிரபு இணை செயலாளர் விஜய் நாகராஜன் பொருளாளர் S. R.கிஷோர் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது  

பொதுக்குழுவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இருந்து  கடந்த 31/ 1 /2025 தேதி இட்ட R. O. C No 117/2025 எண்ணுள்ள கடிதம் தொடர்பாகவும் மற்ற நமது சங்க உறுப்பினர் எழிலரசி என்பவர் கொடுத்த மனு தொடர்பாகவும் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலர்ந்து R. O. C நம்பர் 117/2025  குறிப்பிடப்பட்டிருந்த சங்கதியில் நமது சங்க உறுப்பினர்  சந்தியாகு  (ms no 485 / 1994)   நமது சங்க தேர்தல் நடத்த வேண்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் மனு கொடுத்து இருப்பதாகவும் அது குறித்து பதில் அளிக்குமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது 

தீர்மானம் 1 சங்கத்திற்கு எதிராக சங்க உறுப்பினர்.கண்ணன் (Ms no523/ 2002 என்பவர் கடந்த முறை நடந்த சங்க தேர்தல் செல்லாது என அறிவிப்புக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  W. P. (MD) no 20339/2023 and W. M. P (MD) no 17628/2023 இல் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட உரிமையில் நீதிமன்றத்தில் I. A.  No 1/2023 in O. S. No 535/ 2023 வழக்கு தொடர்ந்தார் மேற்படி வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில்  O. S no 535/ 2023 வழக்கு  மனுதாரர்  கண்ணனால் ஓரிரு மாதங்களுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டது ஆயினும் பொதுக்குழுவில் திரு .கண்ணன் என்பவர் உரிமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்  one bar one vote  முறையாக எடுத்த பிறகும் AIBE தேர்ச்சி பெற்ற வழக்கறிஞர்களுக்கும் Cop/ declaration form அனைத்து வழக்கறிஞர்களிடம் பெற்ற பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என்று வழக்கில் குறிப்பிட்டிருந்தது அதனைத் தொடர்ந்து மேற்படி சங்கதிகளை மறைத்த   சந்தியாகு ( ms no 485/ 1994) நமது சங்க தேர்தல் நடத்த வேண்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இல் மனு கொடுத்துள்ளார். இது குறித்து பல உறுப்பினர்கள் கருத்தின் அடிப்படையில் மீண்டும் இதே காரணத்தை கொண்டு எந்த உறுப்பினரும் சங்கத்திற்கு எதிராக யாரும் செயல்படாமல் இருக்கவும் ஒன் பார் ஒன் ஓட்டு எடுத்த பிறகு புதிதாக வாக்காளர் பட்டியல் தயார் செய்து அடுத்து வரும் நமது சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் கருத்தை ஏற்று ஒருமனதாக ஒன் பார் ஒன் ஓட் முறைப்படி எடுத்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என்றும்

தீர்மானம் 2 நமது சங்க உறுப்பினர்  எழிலரசி (ms no2857 /2025) என்பவர் கொடுத்த மனுவில் நமது சங்கத்தை முறைப்படி புதுப்பித்து one bar one vote எடுத்த பிறகு நமது சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அப்போது தான் இனி வரும் காலங்களில் சங்கத்திற்கு எதிராக உறுப்பினர் கண்ணன் போல் எந்த உறுப்பினரும் செயல்படாமல் இருப்பார்கள் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்  அதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் உறுப்பினர்கள் கருத்து பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

மேலும் சங்கத்தின் 17 ஆண்டுகளாக உள்ள குறைபாடுகளை சரி செய்து சங்கத்தை புதுப்பித்து one bar one vote  ஆகியவற்றை  சரி செய்த பிறகு மூத்த உறுப்பினர்களைக் கொண்டு சங்க தேர்தல் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

 தீர்மானம் 3 Sarfaesi act ல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் advocate Commissioner ஆக கடந்த சங்க முன்னாள் நிர்வாகம் கடைப்பிடித்த நடை முறையின்படி விருப்பமுள்ள உறுப்பினர்கள் பெயர் கொடுத்த அனைவருமே பரிந்துரைக்கப்பட்டது இனிவரும் காலங்களில் விருப்பமுள்ள உறுப்பினர்கள் சங்க நிர்வாகிகளிடம் அப்ளிகேஷன் கொடுப்பவர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள். 

ஆகிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form