இரண்டு நாள் தண்ணீர் வரததால் பொது மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்பு,
திருச்சி, செப்.9: திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கம் வடக்கு பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்,
இப்பகுதியில் மலையடிவாரம் தீப்பெட்டி கம்பெனி தெரு, காயித மில்லத் நகர்உள்ளிட்ட பகுதிகளில் போர் போட முடியாத நிலை உள்ளதால் பெரும்பாலான குடும்பங்கள் அன்றாட மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரை நம்பி தான் உள்ளனர்.
இப்பகுதியில் நேற்றும்,இன்றும் இரண்டு நாட்களும் தண்ணீர் வராததால் உணவு சமைக்க, குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லாததால்.மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்,
மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பைப்பு பழுதடைந்ததால் தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது,
இருப்பினும் இது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் செய்யப்படாததால் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகினர்,
குடிநீர் என்பது மிக அவசியமான ஒன்று எனவே குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக மக்களுக்கு அறிவிப்பு செய்தால் அவர்கள் மாற்று வழி ஏற்பாடு செய்து கொள்வார்கள்,
இனி வரும் நாட்களில் குடிநீர் குழாய்உடைப்பு ஏற்பட்டு பணிகள் நடைபெற்றால் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர், எனவே மேலும் தண்ணீர் பைப் மூலம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால்,உடனடியாக லாரிகள் கொண்டு தண்ணீர் விநியோகம் வழங்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகள்,வார்டு கவுன்சிலர் ஆகியோர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

