ஆளுநரை நியமிக்கும் முறையை கைவிட வேண்டும்,

 பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரை நியமிக்கும் முறையை கைவிட வேண்டும்,


திருச்சி செப், 19:                                மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களை வேந்தராக நியமிக்க வேண்டும்

துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தப்படாத பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்திட வேண்டும்,

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், பணியாளர்கள் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்,


தொடர்ந்து கல்வியில் பிற்போக்கு கருத்துக்களை கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கை நிறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் துணைச் செயலாளர் ஜெ.பி வீரபாண்டியன் தலைமையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

போராட்டத்தில்  மாநில குழு உறுப்பினர்கள்,த.செல்வி, ஜெ.பாரதசெல்வன்,க.கோபி மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌ.ஜெய்லானி, அருள்தனசேகரன். இளைஞர் பெருமன்ற தஞ்சாவூர் மாவட்டம் செயலாளர் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

Post a Comment

Previous Post Next Post

Contact Form