பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கழகம் சார்பில் பொதுக்கூட்டம்.
திருச்சி, செப், 17: பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் அவரின் திரு உருவ சிலைக்கும் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்முத்தரசநல்லூர் கடை வீதியில் நடைபெற்றது
இதில் அந்த நல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார்.
ஒன்றிய துணைச் செயலாளர் கர்ணன் முத்தரசன் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா பேரவை இளைஞர் அணி செயலாளர் ஆதி சிவன் ஒன்றிய இணைச் செயலாளர் மல்லிகா ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்
சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி , தலைமை கழக பேச்சாளர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் வளர்மதி,அரசு கொறடா மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் நற்பண்புகள் சாதனைகள் மற்றும் அதிமுககழகத்தின் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
இதில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்