கலை நன்மணி விருது பெற்ற நாடக கலைஞரை பாராட்டிய சமூக செயற்பாட்டாளர்கள்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, திருச்சிராப்பள்ளி, மாவட்டக் கலை மன்றம் சார்பில் 2023-2024
மாவட்ட அளவில் சிறந்த நாடகக் கலைஞர் என கலை நன்மணி விருது பெற்ற ஆம்ஸ்ட்ராங் ராபிக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
இவர் சமூக சேவை. இயல், இசை, நாடகம், மெல்லிசை பாடகர் என பன்முக கலைஞராக முத்திரை பதித்து பல்வேறு சமூக விருதுகள் பெற்றுள்ளார். மேலும் மாவட்ட அளவில் சிறந்த நாடகக் கலைஞர் என்ற சிறப்பு விருதுக்குரிய பொற்கிழியையும் கலை நன்மணி என்ற பட்டத்தையும் அரசு சார்பில் பெற்ற ஆர்ம்ஸ்ட்ராங் ராபியை கௌரவித்ததை பாராட்டும் விதமாக தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் மனித விடியல் மோகன், ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்க தலைவர் மோகன்ராம்,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், கன்மலை அறக்கட்டளை வில்பர்ட் எடிசன், புது சுவாசம் அறக்கட்டளை பாலசுப்ரமணியன், சுசிலா ராஜசேகரன் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் ராஜசேகரன், புதிய பாதை அறக்கட்டளை தீபா, அருணாச்சலம், நாட்டுக்கு நல்லது செய்வோம் அறக்கட்டளை கணேஷ், டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் தலைவர் பக்கிரி சாமி, சபீர் அகமது, ஷெரிப், ஜின்னா, ஹரிஹரன், ஆசிரியர் ஜூலி உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் கலை நன்மணி விருதாளர் ஆம்ஸ்ட்ராங் ராபிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.